இரத்தினபுரி பிரதேசத்தில் சிறந்த ஒரு ஆளுமையின் ஓய்வு.இரத்தினபுரி பிரதேசத்தில் சிறந்த ஒரு ஆளுமையின் ஓய்வு. ................................................

அதிபர் ஜனாப் எம். எஸ். எம் மில்ஹான்.

சிறந்த ஆளுமை மிக்க ஒரு நபர்...! 

 எவ்வளவு சவால்கள் வந்தாலும் எடுத்த காரியத்தை மிகவும் தைரியமாக செய்து முடிப்பவர்...!  

எந்தவொரு வேலையையும் நேர்த்தியாக செய்பவர்...!

 மக்கியா வரலாற்றில் மற்றுமின்றி இரத்தினபுரி பிரதேசத்தில் தனது சேவையை நிலைநிறுத்தியவர்...! 

 இரத்தினபுரி அல் - மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆரம்பமும் அதிபர் ஜனாப் எம்.எஸ்.எம் மில்ஹான் அவர்களின் சேவையும். ........................................................................... பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும். இரத்தினபுரி நகரத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் பிள்ளைகள் இலவசக் கல்வியின் ஆரம்பம் தொட்டு வேற்று மத பாடசாலைகளில் கல்வி கற்று வந்துள்ளனர். 1960 காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம் மதப் பெரியவர்கள் மற்றும் கல்விமான்கள் ஒன்று கூடி இப்பிரதேசத்திற்கு முஸ்லிம் பாடசாலை ஒன்று பெற்றெடுக்க வேண்டும் என்று எடுத்த முடிவின் பலனாக 1963 காலப்பகுதியில் இலங்கை பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சராக இருந்த அல் ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களை சந்தித்து பல முறை பேச்சி வார்த்தை நடாத்தியதன் பலனாக இ/இரத்தினபுரி தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று வந்த 25 மாணவ/மாணவிகளையும் 04 ஆசிரியர்களையும் வேறாக பிரித்தெடுத்து அதே பாடசாலையின் ஒரு பகுதியில் இ/அல் மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயம் எனப் பெயர் சூட்டப்பட்ட ஒரு பாடசாலையை 1963.09.01 ம் திகதி இரத்தினபுரி வாழ் முஸ்லிம் மக்களுக்கு கையளிக்கப்பட்டது. 

 இப்பாடசாலைக்கு ஜென்னத் மஸ்ஜித் அருகில் மக்காவில் இருந்து வந்து அடங்கப்பட்டுள்ள அவ்லியாக்களின் தலைவரான மக்கிவலியுள்ளாவின் பெயரையே அமைச்சர் அல் ஹாஜ் பதுயுதீன் மஹ்மூத் அவர்களால் சூட்டப்பட்டுள்ளது. இப்பாடசாலையின் முதற் கடமை பொறுப்பாசிரியராக ஜனாப் ஏ.எச்.எம் அபூசகீட் அவர்கள் கல்வித் திணைக்களத்திளனால் நியமிக்கப்படுள்ளார். 1963.09.01 முதல் 1976.03.31 முதல் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குள் 11 அதிபர்கள் இப்பாடசாலையை பொறுப்பேற்றுள்ளனர். இப்பாடசலையின் 12 வது அதிபராக எஹலியகொட இ/அல் அக் ஷா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து 1976.04.01 ம் திகதி இடமாற்றம் பெற்று வந்துள்ள மர்ஹும் எம்.எஸ்.எம். சிறாஜூதீன் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். 

 அவரின் சேவைக் காலத்தில் முதற்கட்டமாக 1976.04.28 ம் திகதி இப்பாடசாலை கல்வி அமைச்சினால் கா.பொ.த (உ/த) வணிகப்பிரிவு ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் தரம் 2 மட்டத்தில் இருந்து தரம் 1C ஆக தரம் உயர்தப்பட்டுள்ளது ஒரு விஷேட நிகழ்வாகும். நாளுக்கு நாள் மாணவர்களின் வரவு கூடிக் கொண்டு போக இப்பாடசாலைக்கு ஒதுக்கப்பட்டிருந்த மண்டபத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாகவும் இப்பாடசாலைக்காக வேறாக தனி ஒரு இடம் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டதன் காரணமாகவும், இப்பாசாலையை பெற்றெடுத்த குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சமூகத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் அதிபரின் தலைமையில் கூடி நடாத்திய பல பேச்சுவார்த்தை சுற்றுக்களின் முடிவில் அன்றைய அரசியல் பிரமுகர்களின் உதவியுடன் தற்போது பாடசாலை அமைந்துள்ள 01 ஏக்கர் 15.8 பர்சர்ஸ் பரப்பளவுள்ள இக் காணி 1985.02.13 ம் திகதி அரசினால் சுவீகரிக்கப்பட்டு பாடசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.

இக்காணியை பெற்றெடுத்த பாடசாலையின் 12 வது அதிபர் மர்ஹும் எம்.எஸ் சிராஜூதீன் அவர்களின் முயற்சினால் மற்றும் அதற்கு உதவிய சகல உறுப்பினர்களினதும் உதவியால் பெற்ற மாபெறும் வெற்றி எனக் குறிப்பிடலாம். மர்ஹூம் எம்.எஸ் சிராஜுதீன் அவர்களின் மூன்றாம் கட்ட வேலையாக இக்காணியில் அவசரமாக ஒரு கட்டிடத்தை நிர்மாணித்து இப்பாடசாலையை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக பல கூட்டங்களை நடாத்தி எடுத்த முடிவின் பயனாக இரத்தினபுரி வாழ் முஸ்லிம் தலைவர்களின் உதவியால் 1985.10.25 ஆம் திகதி புதிய மூன்று மாடி கட்டிடம் ஒன்றுக்காக அடிக்கல் நாட்டப்பட்டு 1987ம் ஆண்டு 15 ஆம் திகதி இக்கட்டத்தின் முதலாம் மாடி திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1987.01.19 ஆம் திகதி பாடசாலையின் தரம் 3 முதல் தரம் 11 வரையிலான வகுப்புக்கள் புதிய கட்டடத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் தரம் 1,2 வகுப்புகள் ஜன்னத் ஜூம்மா பள்ளிவாசலின் ஒரு பகுதியில் நடத்தப்பட்டு வந்தது. தரம் 01 மற்றும் தரம் 02 இரு வகுப்புகளையும் புதிய பாடசாலை காணி அமைந்துள்ள இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற பிரச்சினையை ஒன்று கூடி கதைத்து அதிபர் மற்றும் அபிவிருத்திச் சங்க குழு அங்கத்தவர்கள் இப்பிரதேச தலைவர்களின் ஒருவரான மர்ஹும் அல்ஹாஜ் நஸ்ருதீன் அவர்கள் 1990.10.23 ஆம் திகதி 60 × 20 பரப்பளவு உள்ள ஒரு மண்டபத்தை தனது சொந்த செலவில் நிர்மாணித்து இரத்தினபுரி வாழ் முஸ்லிம் சிறார்களின் கல்வித் தேவைக்காக கையளித்து வைத்தார். இத்தினம் புதிய மண்டபத்தின் 1990 ஆம் வருடத்திற்கான மீழாத் விழாவும் பரிசளிப்புகளும் சமூகம் தந்த பிரமுகர்களினால் நடாத்தப்பட்டது ஒரு சிறப்பு அம்சமாகும். இப்பாடசாலையின் 13 வது அதிபராக இ/ரபுக்கந்த தமிழ் வித்தியாலயத்தில் இருந்து இடமாற்றம் பெற்று வந்த ஜனாப் எஸ்.ஏ.ஏ இப்ராஹிம் அவர்கள் 1991.01.01 முதல் தனது சேவையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.  

இவரின் சேவை காலத்தில் பாடசாலைக்கு குறைபாடாக இருந்து வந்த பாடசாலை காணியைச் சுற்றி மதில் கட்டும் பணி 1994 டிசம்பர் காலப்பகுதியில் செய்தி முடிக்கப்பட்டு இருந்தது மற்றும் 90 ×25 பரப்பளவு கொண்ட 3 மாடி கட்டிடம் ஒன்றின் முதல் மாடி கட்டிடப் பணிகள் 1997.08.05 ஆம் திகதி முடிக்கப்பட்டு பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. அத்துடன் இம்மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடி கட்டிடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதிபர் மர்ஹும் எஸ்.ஏ.ஏ இப்ராஹீம் அவர்கள் 1998.02.02 ம் திகதி பலங்கொட கல்வி வலையத்திற்கு உட்பட்ட இ/பல/பளான தமிழ் வித்தியாலத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இக்காலப் பகுதியில் பாடசாலையில் 318 பிள்ளைகளும் 13 ஆசிரியர்களும் சேவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் 14 வது அதிபராக சபரகமுவ மாகண கல்வி திணைக்களத்தின் உதவி கல்வி பணிப்பாளர் தமிழில் மருகுமலஹாசன் எம்.எஸ்.எம் ஹுசைன் அவர்களின் சிபாரிசின் பேரில் நிவித்திகல வலயத்துக்கு உட்பட்ட தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஜனாப் எம் எஸ் எம் மில்ஹான் அவர்கள் தனது 34 ஆவது வயதில் தனது ஒன்பது வருட கால சேவையின் பின் 1998.02.09ஆம் திகதி இப்பாடசாலையை பொறுப்பேற்றார். 

 இவர் இப்பாடசாலையில் பொறுப்பேற்கும் போது பாடசாலையின் கல்வி மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டது. தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் கா.பொ.த (சா/த) பரீட்சை சித்தி வீதங்கள் பூச்சிய நிலையில் காணப்பட்டது மட்டுமல்லாது இப்படசாலையின் 12 வது அதிபர் மர்ஹூம் சிராஜுதீன் அவர்களால் 1972.04.28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கா.பொ.த உயர்தர வணிக பிரிவும் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது. இது மட்டுமல்லாது ஆங்கிலம், விஞ்ஞானம், இஸ்லாம், வணிகம், சமூக கல்வி போன்ற பாடங்களுக்கு மாத்திரமே ஆசிரியர்கள் காணப்பட்டதுடன் முக்கிய பாடங்களான கணிதம் , தமிழ் பாடமும் வேறு எந்த பாடங்களுக்கும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் காணப்பட்டது. இவர் கையில் கிடைத்த முதலாவது கா.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறு 1997 டிசம்பர் மாதம் பரீட்சைக்கு தோற்றிய 29 மாணவ/ மாணவிகளின் பெறுபேறுகள் 1998.05.29 கிடைத்தது ஒரு மாணவ /மாணவியும் சித்தி அடைந்து இருக்கவில்லை. இந்த மாபெரும் சவாலுக்கு முகம் கொடுக்க ஆயத்தமான அதிபர் ஜனாப் எம் .எஸ். எம் மில்ஹான் அவர்களின் முதலாவது இலக்காக இருந்த விடயம் 1998 டிசம்பர் மாதம் கா.பொ.த (சா/த) பரீட்சையில் முகம் கொடுக்க இருக்கும் 23 மாணவ மாணவிகளின் 25% பிள்ளைகளையாவது சித்தி அடைய வைத்து மூடப்பட்டிருந்த கா.பொ.த உயர்தர பிரிவின் கலை பிரிவையாவது ஆரம்பித்து வைப்பதாகும். இதற்காக பல முயற்சிகளை கையாண்டு அவரின் நண்பன் திரு. துரைசிங்கம் அவர்களை அழைத்து கணித ஆசிரியரின் உதவியை பெற்று எடுத்த முயற்சியின் பலனாக 1998 டிசம்பர் மாதம் கா.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றிய 23 மாணவ மாணவிகளில் கா.பொ.த உயர்தர கற்கைக்காக 7 மாணவ மாணவிகளின் தேர்ச்சி பெற்றனர் 1999.05.11 பெறுபேரின் அடுத்தகட்ட வேலையாக 1999 ஆகஸ்ட் மாதம் கல்வி அமைச்சர் திணைக்களத்தின் பூரண அனுமதியுடன் சித்தி அடைந்த ஏழு மாணவிகளின் வைத்து பாடசாலையில் அன்று கடமைகளில் இருந்து ஆசிரியர்களையே வைத்து பொருளியல் புவியியல் இஸ்லாம் மற்றும் தமிழ் பாடங்களை கற்பித்து 2001 ஆம் ஆண்டு பரீட்சைக்கு அனுப்பி அதில் மூன்று மானமாக சித்தி பெற்றனர்.

 காணப்பட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களை தேடி பெற்றெடுத்து வருடா வருடம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, கா.பொ.த (சா/த) பரீட்சை, கா.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கூடிக் கொண்டே சென்ற விடயம் பாடசாலை சமூகத்திற்கு மகிழ்ச்சியையும். மாணவர் வருகை அதிகப்படுத்தவும் செய்தது. அதிபர் ஜனாப் எம். எஸ்.எம் மில்ஹாம் அவர்கள் பரீட்சை பெறுபேறு மாணவர் வரவு என்பவற்றை வருடத்திற்கு வருடம் அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல் பாடசாலைக்கு குறைபாடாக காணப்பட்ட அனைத்து வளங்களையும் அவரின் சுய முயற்சியை கொண்டு வருடா வருடம் துரிதப்படுத்திக் கொண்டே சென்றது கண்கூடாக கண்ட விடயமாகும். பாடசாலைக்கு வளங்களை பெற்றுக் கொள்வதில் அரசு வேகத்தில் இயங்கி அதிபர் ஜனாப் எம்.எஸ்.எம் மில்ஹான் அவர்கள் முதலாவது வேலை திட்டமாக 1997.09.08 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட மூன்று மாடி இரண்டாம் கட்டிடத்தில் இரண்டாம் மாடி கட்டிடப் பணிகள் முடிவடைந்து 1999.03.09 திகதி மண்டபத்தை மாண / மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து அம்மாடி கட்டிடத்தின் மூன்றாம் மாடியை பெற்றெடுத்து அதன் கட்டிட நிர்மாண பணிகள் முடிவடைந்து.2003 .12 .17 ஆம் திகதி பொறுப்பேற்று பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைத்தார். 

 பாடசாலைக்கு பிரதான மண்டபம் ஒன்று இல்லாததால் இக்கட்டடத்தின் மூன்றாம் மாடியை ஒரு பிரதான மண்டபமாகவே பெற்றெடுத்தது ஒரு விசேட அம்சமாகும் அது மாத்திரம் அல்லாமல் முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்கு கட்டாயமாக தொழுகைக்காக பள்ளிவாசல் ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நோக்கை கருத்தில் கொண்டு பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராக அப்போது கடமையிலிருந்து அல்ஹாஜ் எம்.எஸ்.எம் ஃபாரூக் அவர்களுடன் இணைந்த பிரதேச தனவந்தர்களின் உதவியை பெற்று இருமாடி கட்டிடமாக பாடசாலைக்கு பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணித்தார்.இப்பள்ளி வாசலின் மீதி நிர்மாண பணிகள்/பணிகளில் அல்ஹாஜ் நிசாம் அவர்கள் செய்து தந்ததும் ஒரு முக்கிய விடயமாகும் அது மட்டுமல்லாமல் பாடசாலையின் கல்வி கற்கும் மாணவ /மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கு சேர்த்து பாடசாலையில் குறைபாடாக இருந்த மலசல கூட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக அல்ஹாஜ் எம்.எஸ்.எம் ஃபாரூக் அவர்களுடன் சேர்ந்து அடுத்த முயற்சியின் பலனாக 1990 காலப்பகுதியில் மர்ஹும் உசைன் அவர்களினால் பாடசாலைக்கு இரண்டு மலசல கூடங்களை பெற்றெடுத்துள்ளார். அதிபர் ஜனாப் எம்.எஸ்.எம் மில்ஹான் அவர்களின் சேவை காலம் இரத்தினபுரி அல் - மாக்கிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பொற்காலம் என்றே கூறலாம்.


பெறுபேறுகளை ஆய்வு செய்தல்...! தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு முதன் முறையாக 1963 ஆம் ஆண்டு முதல் தோன்றிய 1997 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 35 வருடங்களில் 12 மாணவ மாணவிகளை சித்தி அடைந்துள்ளனர். அதிபர் ஜனாப் எம். எஸ். எம் மில்ஹான் அவர்களின் சேவை காலமான 1998 முதல் 2023 வகையான 25 வருட காலநிலைக்குள் 77 மானமான சித்தி அடைந்துள்ளன. அதேபோன்று சாதரண தர பரீட்சைக்கு பாடசாலையிலிருந்து 1963 முதல் 1997 வரை 35 வருடங்கள் பரீட்சைக்கு தோற்றி 25 மாணவ, /மாணவிகளை சித்தி அடைந்துள்ளனர். அதிபர் ஜனாப் எம். எஸ். எம் மில்ஹான் அவர்களின் சேவை காலமான 1998 முதல் 2022 வரை 25 வருட கால சேவையில் 440 மாணவ /மாணவிகள் சித்தியடைந்து கா.பொ.த உயர்தரத்திற்கு அனைத்து பிரிவுகளுக்கும் தகுதி பெற்றுள்ளனர். 1963 முதல் 1998 வரை கிட்டதட்ட 35 வருடங்கள் வர்த்தக பிரிவு உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றி இரண்டு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். அதன் பின் உயர்தர பிரிவு பாடசாலையில் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டது. சேவைக்கு வந்த பின் 2007 முதல் 2024 வரை வணிகப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு வணிகப்பிரிவால் மீண்டும் பரீட்சைக்கு தோன்றிய 20+ மாணவர்களை சித்தி அடைய வைத்து பல்கலைக்கழக தகுதியை பெற்றுள்ளார்கள். அத்துடன் 1999 வருடம் கா.பொ.த உயர்தர கலை பிரிவை ஆரம்பித்து 2001 ஆம் வருடம் தொடக்கம் 2024 ஆம் வருடம் வரை 450+ மாணவ /மாணவிகள் சித்தியடைந்து பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளது ஒரு விஷேட அம்சமாகும் என குறிப்பிடலாம். 

 தற்போது அநேக மாணவர்கள் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர்ந்து பட்டம் பெற்றுள்ளதுடன் இன்னும் கல்வி கற்றுக்கொண்டும் இருக்கிறார்கள். கல்வியியற் கல்லூரிகள் மற்றும் டிப்ளோமாக்கள் செய்து கொண்டும் இருப்பரனை காணலாம். இது ஒரு பாரிய சமூக சேவை இரத்தினபுரி மண்ணில் கல்வியை உயிர்பித்தவர் என கூறலாம். ஆரம்பித்த காலம் முதல் ஒவ்வொரு தரத்திலும் ஒவ்வொரு வகுப்புகள் இருந்த போதும் வருடா வருடம் பிள்ளைகளின் வரவுகள் அதிகரித்ததன் காரணமாக கல்வி திணைக்களத்தின் அனுமதி உடன் ஒவ்வொரு தரத்திலும் இரண்டு வகுப்புகளை ஆரம்பித்த நடவடிக்கை எடுத்துள்ளார். அது மாத்திரம் அல்லாமல் இவரின் சேவை ஆரம்பத்தில் 300 மாணவ மாணவிகளையும் 13 ஆசிரியர்களை வைத்து தொடங்கிய முன்னேற்ற சேவை பயணத்தின் பயனாக இன்று கிட்டத்தட்ட 800 மாணவ மாணவிகள் 36 ஆசிரியர்களும் இப்படசாலையில் சேவையாற்றுகின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுயமாக தேவையான பாடங்களுக்கு தேவையான 100 ஆசிரியர்களை பெற்றெடுத்து கிட்டத்தட்ட ஐந்து வருடம் பாடசாலையில் சேவைகளை பெற்ற பின் அவ்வாசிரியர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கே இடமாற்றங்கள் பெற்றுக் கொள்ளவும் உதவி செய்துள்ளார். ஜனாப் எம்.எஸ்.எம் மில்ஹான் அவர்கள் 25 வருட சேவை காலத்தில் இப் பாடசாலைக்கு குறைபாடாக இருந்த அனைத்து வளங்களையும் அவரின் சொந்த முயற்ச்சியின் பலனாக பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாத விடயம் எனக் கூறிக் கொள்ளலாம்.


இரத்தினபுரி பிரதேசத்தில் சிறந்த ஒரு ஆளுமையின் ஓய்வு. இரத்தினபுரி பிரதேசத்தில் சிறந்த ஒரு ஆளுமையின் ஓய்வு. Reviewed by Madawala News on May 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.