தம்புள்ளையில் கசிப்பு அருந்தி நான்கு பேர் உயிரிழப்புசட்டவிரோத மதுபானம் (கசிப்பு ) அருந்தி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த சம்பவம் தம்புள்ளை விகாரை சந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே சட்டவிரோத மதுபானத்தை அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதாகவும் இன்று அதே மதுபானத்தை அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.இந்த சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் பல தடவைகள் பொலிஸாரினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இந்த சட்டவிரோத மதுபான விற்பனை மோசடியால் பிரதேசவாசிகள் தற்போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைக்கு மேலதிகமாக, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று அவர்களின் மரணத்திற்கான உண்மை காரணங்களைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தம்புள்ளையில் கசிப்பு அருந்தி நான்கு பேர் உயிரிழப்பு தம்புள்ளையில் கசிப்பு அருந்தி நான்கு பேர் உயிரிழப்பு Reviewed by Madawala News on May 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.