இளம் தம்பதியை மிரட்டச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்களும், துறைமுகப் பணியாளரும் பணி நீக்கம்.பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட மகளின் குடும்பத்திற்கு மகளின் தந்தை கடும் அழுத்தத்தை கொடுத்த சம்பவம் ஒன்று பன்னிபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.திருமணத்தின் பின்னர் இருவரும் பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் உள்ள இளைஞனின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதன்போது, தந்தையின் தொடர் அழுத்தங்களை தாங்க முடியாமல் இருவரும் டுபாய்க்கு சென்றுள்ளனர்.அந்த நாட்டுக்கும் வந்து பெண்ணின் தந்தை தங்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக அவர்கள் கூறுகின்றனர். பின்னர் இந்த இளம் தம்பதியினர் மீண்டும் நாட்டுக்கு வந்து வீரமாவத்தை வீட்டில் வசித்து வந்தனர்.இந்தப் பின்னணியில் கடந்த 29ஆம் திகதி பன்னிப்பிட்டியவில் உள்ள இளைஞனின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளெனக் கூறிக்கொண்டு மூவர் வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.அப்போது வீட்டில் இருந்த தாயின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டதாகவும், தாயாரை அச்சுறுத்தியதாகவும் அந்த இளைஞனின் புகைப்படங்கள் சிலவற்றை தமது தொலைபேசிக்கு அனுப்பிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.மகளின் தந்தைக்கு சொந்தமானது என கூறப்படும் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குறித்த மூவரும் மது அருந்தியுள்ளனர்.பின்னர் மூன்று அதிகாரிகளில் இருவர் ஹோட்டல் வளாகத்தில் மறைந்திருந்த நிலையில் மற்றைய நபர் காரில் தப்பிச் செல்லும்போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொண்ட குறித்த சந்தேகநபர் துறைமுகப் பணியாளர் எனவும் மற்றைய இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இளம் தம்பதியை மிரட்டச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்களும், துறைமுகப் பணியாளரும் பணி நீக்கம். இளம் தம்பதியை மிரட்டச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்களும், துறைமுகப் பணியாளரும் பணி நீக்கம். Reviewed by Madawala News on May 08, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.