தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்து தாயாருடன் தகராறு செய்துவந்த தந்தையின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த மகன் கைது #இலங்கை

இளைய மகன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தன் தந்தையின் ஆணுறுப்பை வெட்டியதாக கூறப்படும் சம்பவத்தில் பாதிக்கபட்ட நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் நேற்று கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.


உடகம, யட்டகம ரம்புக்கன பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.


அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளதாகவும் அவர்கள் 28-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வேலை செய்யாமல் வீட்டிலேயே தங்கியிருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

படுகாயம் அடைந்த தந்தை  மனைவியுடன் சிறிது காலமாக தகராறு செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கடந்த 30ஆம் திகதி இரவு முதலாம் மற்றும் மூன்றாவது ஆண் மகனுடன்   பெற்றோர் வீட்டில் இருந்ததாகவும், இரண்டாவது மகன்  வீட்டில் இருந்து வெளியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இரவு 7.30 மணியளவில் தந்தை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து வழமை போன்று மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


அதனால் கோபமடைந்த ​​28 வயதுடைய மகன்  தனது தந்தையின் ஆணுறுப்பை கூரிய ஆயுதத்தால் அறுத்து எறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்த நபர் இரவு வீட்டில் இருந்து வெளியில் வந்து காட்டுக்குள் மறைந்திருந்த நிலையில் நேற்று ஆபத்தான நிலையில் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


ராமுக்கன வைத்தியசாலையில் சிகிச்சைக்கு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதோடு, காயமடைந்த நபருக்கு கேகாலை பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தற்போது, ​​காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேக நபரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்து தாயாருடன் தகராறு செய்துவந்த தந்தையின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த மகன் கைது #இலங்கை தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்து தாயாருடன் தகராறு செய்துவந்த தந்தையின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த மகன் கைது #இலங்கை Reviewed by Madawala News on May 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.