மருமகனின் கோடரி தாக்குதலில் 45 வயது மாமனார் பலிவவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் காேடரியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு காெண்டு செல்லப்பட்ட பாேதும் அவர் அங்கு காெண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுயை மாேகன் என்பவரே மரணமடைந்தவராவார்.

சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பாெலிசார் இச்சம்பவம் தாெடர்பில் விசாரணைகளை மேற்காெண்டு வருகிறார்கள்
மருமகனின் கோடரி தாக்குதலில் 45 வயது மாமனார் பலி மருமகனின் கோடரி தாக்குதலில் 45 வயது மாமனார் பலி Reviewed by Madawala News on May 06, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.