டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன.. விரைவில் தண்டனை அறிவிக்கபட்டவுடன் சிறை செல்லவும் நேரிடும் .வரலாற்று ரீதியான குற்றவியல் விசாரணையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.


போலியான வணிகப்பதிவுகள் தொடர்பில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிவ்யோர்க்கில் இடம்பெற்றன.


அவருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவின் முன்னாள் அல்லது தற்போதைய ஜனாதிபதி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.


இந்தத் தீர்ப்பிற்கமைய முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிறைக்குச் செல்ல நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும் அவரது சட்டத்தரணிகள் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கு அதிக சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதியை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழையலாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்.

இருப்பினும், ட்ரம்ப் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே பேசிய டிரம்ப், ``நான் மிகவும் அப்பாவி. இந்த நாட்டுக்காகவும், அரசியலமைப்புக்காகவும் நான் போராடுகிறேன். இங்கு என்ன நடந்தது என்பதை அனைவருமே அறிவர். இதுவொரு மோசமான விசாரணை. உண்மையான தீர்ப்பு நவம்பர் 5-ம் தேதி மக்கள் அளிப்பார்கள்" என்று கூறினார். இன்னொருபக்கம், நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை வரவேற்ற அதிபர் ஜோ பைடன் தரப்பு, `சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்பதை நியூயார்க் நீதிமன்றத்தில் நாங்கள் இன்று கண்டோம்' என்று தெரிவித்திருக்கிறது.


டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன.. விரைவில் தண்டனை அறிவிக்கபட்டவுடன் சிறை செல்லவும் நேரிடும் . டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன.. விரைவில் தண்டனை அறிவிக்கபட்டவுடன் சிறை செல்லவும் நேரிடும் . Reviewed by Madawala News on May 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.