வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 04 வீடமைப்புத் தொகுதிகளில் முன்பள்ளிகளை நடாத்திய யோஷிதா அறக்கட்டளைக்கு அந்தக் காணிகளின் உரிமை⏩ வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 04 வீடமைப்புத் தொகுதிகளில் முன்பள்ளிகளை நடாத்திய யோஷிதா அறக்கட்டளைக்கு அந்தக் காணிகளின் உரிமை...

⏩ ஜனாதிபதியின் கைகளால் உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டது...

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 04 வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் யோஷிதா அறக்கட்டளையினால் நடத்தப்படும் முன்பள்ளியுடன் கூடிய காணி அந்த அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய களுத்துறை மத்தேகொட, நுவரெலியா குமாரகம, ஹொரண அமரகம மற்றும் நிட்டம்புவ ரண்பொகுணகம தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் முன்பள்ளி இயங்கி வந்த காணியை யோஷிதா அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார். மேலும் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தலைவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கம் உதாவ திட்டத்தின் கீழ் இந்த 04 வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட அதே வேளையில், யோஷிதா அறக்கட்டளை அங்கு வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காக முன்பள்ளிகளை ஆரம்பித்தது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைவாக ஜப்பானிய உதவியின் கீழ் அந்த இடங்களில் முன்பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன.

யோஷிதா அறக்கட்டளை இந்த இடங்களில் முன்பள்ளிகளை நடத்தி வந்தாலும், காணி உரிமை இல்லாததால் அவற்றின் அபிவிருத்தியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

யோஷிதா அறக்கட்டளையின் தலைவர் வணக்கத்திற்குரிய பானகல உபதிஸ்ஸ தேரர், இந்த காணியை தீர்த்து தமக்கான உரிமையை வழங்குமாறு நான்கு அரச தலைவர்களிடமும், 10க்கும் மேற்பட்ட வீடமைப்பு அமைச்சர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என்று தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் வணக்கத்துக்குரிய பனகல உபதிஸ்ஸ தேரர் தமது பிரச்சினையையும் முன்வைத்தார். இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் பிரசன்ன, இது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சிக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த நிலங்களின் உரிமையானது வழக்கமான முறைப்படி வழங்கப்பட்டது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் வீட்டுத் தொகுதிகள் இயங்கும் இடங்களில் நலன்புரி திட்டங்களுக்காக காணிகளை மாற்றுவதற்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உரிமை உள்ளதை சுட்டிக்காட்டிய தலைவர், சட்டத்தின் பிரிவுகளின்படி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


முனீரா அபூபக்கர்
2024.05.27
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 04 வீடமைப்புத் தொகுதிகளில் முன்பள்ளிகளை நடாத்திய யோஷிதா அறக்கட்டளைக்கு அந்தக் காணிகளின் உரிமை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 04 வீடமைப்புத் தொகுதிகளில் முன்பள்ளிகளை நடாத்திய யோஷிதா அறக்கட்டளைக்கு அந்தக் காணிகளின் உரிமை Reviewed by Madawala News on May 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.