இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.



 கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .


இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .


அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .


அப்போது, அவர் ​​பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .


பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .


அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .

இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு. இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு. Reviewed by Madawala News on May 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.