ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழு!ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியொன்றில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.


தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.


இந்தநிலையில் ஜனாதிபதியிடமே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் காணப்படுகிறது.


எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.


அதற்கு முன்னதாக ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழு! ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழு! Reviewed by Madawala News on May 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.