எமது அரசில் மதுபான உரிமங்கள் தடை செய்யப்படும் – சஜித் எச்சரிக்கைதேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் ஆசிர்வாதத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இது கட்டாயம் நிறுத்தப்படும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த உரிமங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும். இது தொடர்பாக நீதிமன்றங்களை நாடினால், பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக இந்த உரிமங்களை தடை செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகத்தின், வெலங்கஹவல சந்தியில் மதுபான அனுமதிப்பத்திரத்துடன் கூடிய உணவகம் தொடர்பில் தான் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.


இது குறித்து மீண்டும் கேள்வி எழுப்புவது குறித்து கவலை தெரிவிக்கிறேன். மகா சங்கத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் மீண்டும் இது மீள திறக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அங்கு தெரிவித்தார்.

எமது அரசில் மதுபான உரிமங்கள் தடை செய்யப்படும் – சஜித் எச்சரிக்கை எமது அரசில் மதுபான உரிமங்கள் தடை செய்யப்படும் – சஜித் எச்சரிக்கை Reviewed by Madawala News on May 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.