ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கை முதலாவது குழு புறப்பட்டு சென்றது..2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஹஜ் யாத்திரை பங்குபற்றவுள்ள 3,500 ஹாஜிகளில் 68 இலங்கை ஹாஜிகள் அடங்கிய முதலாவது குழு இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவிற்கு புறப்பட்டது. 


அவர்கள் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் புத்தசாசன, சமய கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹம்மூத் அல்-கஹ்தானி, இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் இப்ராஹிம் சாஹிப் அன்சார் ஹஜ் குழு உறுப்பினர் மில்பர் கபூர் , இபாஸ் நபுஹான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இந்த யாத்திரை குழுவினர் இன்று (21) அதிகாலை 05.15 மணியளவில் ஏர் அரேபியா ஜி. 9503 என்ற விமானத்தில் மக்காவிற்கு புறப்பட்டனர்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கை முதலாவது குழு புறப்பட்டு சென்றது.. ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கை முதலாவது குழு புறப்பட்டு சென்றது.. Reviewed by Madawala News on May 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.