சாய்ந்தமருது பத்தாஹ் பள்ளி இமாம் ஏ.எல் அன்ஸார் மெளலவி காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தேன் ; ஏ.சி. யஹியாகான்கல்முனை சாஹிராக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் தற்போது சம்மாந்துறை மத்திய கல்லூரியில் கடமையாற்றுபவருமான  சாய்ந்தமருது பத்தாஹ் பள்ளி இமாம்  ஏ.எல். அன்ஸார் மெளலவி காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைகின்றேன்.


திருமண நிகழ்வுகளுக்கு செல்லும் வேளைகளில் அடிக்கடி அன்ஸார் மௌலவியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.


சிரித்த முகம் - கனிவான பேச்சு என்ற அவரது சுபாவம் எனக்கு மட்டுமன்றி பலருக்கும் ஆச்சரியமான விடயம்தான். அவர் கோபப்பட்டதை நான் கண்டதே இல்லை.


மௌலவி மட்டுமன்றி - சிறந்த ஆசானாகவும் திகழ்ந்தார் அன்ஸார் மௌலவி. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் அவரின் பங்களிப்பு மகத்தானது. அர்ப்பணிப்பு மிக்க ஒரு மனிதனை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.


அன்ஸார் மௌலவியின் பிரிவால் துயருறும் அவரது மனைவி , பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களின் துயரத்தோடு நானும் பங்கு கொள்கின்றேன். 


அன்னாருக்கு மேலான சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.


ஏ.சி. யஹியாகான்

பிரதிப் பொருளாளர்

முஸ்லிம் காங்கிரஸ்

சாய்ந்தமருது பத்தாஹ் பள்ளி இமாம் ஏ.எல் அன்ஸார் மெளலவி காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தேன் ; ஏ.சி. யஹியாகான் சாய்ந்தமருது பத்தாஹ் பள்ளி இமாம்  ஏ.எல் அன்ஸார் மெளலவி காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தேன் ; ஏ.சி. யஹியாகான் Reviewed by Madawala News on May 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.