மட்டக்களப்பு பஸ் நிலையத்தில், இ.போ.ச பஸ் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதலை மேற்கொண்ட தனியார் பஸ் சாரதி - பஸ்சை கொஞ்சம் முன்னோக்கி நகர்த்த சொன்னதால் கோபமடைந்து தாக்குதல்.மட்டக்களப்பு நகர் தனியார் பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று புதன்கிழமை (15) இலங்கை போக்குவரத்து பஸ் சாரதி நடத்துநர் மீது தனியார் போக்குவரத்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் சாரதி நடத்துநர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட சாரதி பஸ் வண்டியுடன் தப்பியோடிய நிலையில் நடுத்துநரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று காலை 11.10 மணியளவில் பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் பஸ் தரித்து நின்றுள்ளது. இதன் போது பின்னால் கல்முனையை நோக்கி பயணித்த மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து பஸ் சாரதி பஸ்தரிப்பு நிலையத்தில் நிறுத்துவதற்காக அங்கு தரித்து நின்ற தனியார் பஸ் சாரதியை பஸ்ஸை கொஞ்சம் முன்னோக்கி நகர்த்துமாறு தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து தனியார் பஸ் சாரதி கோபமடைந்து பஸ்ஸில் இருந்து இறங்கி இலங்கை போக்குவரத்து பஸ் சாரதி, நடத்துநர் மீதும் தாக்குதலை மேற்கொண்டதில் சாரதி, நடத்துநர் படுகாயமடைந்ததையடுத்து தனியார் பஸ் சாரதி பஸ்வண்டியுடன் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து இதில் காயமடைநத இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதில் தனியார் பஸ் நடத்துநரை கைது செய்துள்ளதாகவும் தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில், இ.போ.ச பஸ் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதலை மேற்கொண்ட தனியார் பஸ் சாரதி - பஸ்சை கொஞ்சம் முன்னோக்கி நகர்த்த சொன்னதால் கோபமடைந்து தாக்குதல். மட்டக்களப்பு பஸ் நிலையத்தில், இ.போ.ச பஸ் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதலை மேற்கொண்ட தனியார் பஸ் சாரதி - பஸ்சை கொஞ்சம் முன்னோக்கி நகர்த்த சொன்னதால் கோபமடைந்து தாக்குதல். Reviewed by Madawala News on May 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.