பலாங்கொடை பிரதேசத்தில் நிகழும் 70% அகால மரணங்கள் மாரடைப்பு காரணமாகவே இடம்பெறுவதாக தகவல்பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்பு காரணமாக 30-50 வயதுக்கு இடைப்பட்ட 70% மரணங்கள் மாரடைப்பு காரணமாக ஏற்பட்டுள்ளன என பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார்.


இந்த தரவுகளின்படி, மாரடைப்பால் இறக்கும் போக்கு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களிடையே அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இளைஞர்கள் மற்றும் ஐம்பது வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் உள்ள வயதான பின்னரே இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிலவும் கருத்தை மாற்ற வேண்டும் எனவும் மரண விசாரணை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திடீரென வயிற்றில் வீக்கம், மயக்கம், வலிப்பு ஏற்பட்டால் ரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

30-50 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களும் நடுத்தர வயதினரும் மேற்குறிப்பிட்ட அவசரகால நிலைமைகளுடன் ஏற்படும் மாரடைப்புகளில் இருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டுமென திரு.பத்மேந்திர விஜேதிலக்க மேலும் தெரிவித்தார்.
பலாங்கொடை பிரதேசத்தில் நிகழும் 70% அகால மரணங்கள் மாரடைப்பு காரணமாகவே இடம்பெறுவதாக தகவல் பலாங்கொடை பிரதேசத்தில் நிகழும் 70% அகால மரணங்கள் மாரடைப்பு காரணமாகவே இடம்பெறுவதாக தகவல் Reviewed by Madawala News on May 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.