அரசாங்கம் வழங்கிய அரிசியை தின்ற 7 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு - நீதிமன்றில் அறிக்கை தாக்கல்குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கம் வழங்கிய அரிசியை தின்று 7 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதன்படி அரிசி தொடர்பான தரம் பரிசோதனை அறிக்கையை வரவழைக்குமாறு ரம்பதகல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியை பனகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் நபர் ஒருவர் எடுத்துச் சென்று கோழிகளுக்குக் கொடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எவ்வித காரணமும் வெளிவர முடியாத காரணத்தினால், நீதிமன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு தர பரிசோதனை அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அரசாங்கம் வழங்கிய அரிசியை தின்ற 7 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு - நீதிமன்றில் அறிக்கை தாக்கல் அரசாங்கம் வழங்கிய அரிசியை தின்ற 7 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு -  நீதிமன்றில் அறிக்கை தாக்கல் Reviewed by Madawala News on May 14, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.