அறையில் ஜெனரேட்டர் இயந்திரத்தை இயக்க வைத்துவிட்டு தூங்கிய தந்தை (40) மற்றும் மகன் (17) உயிரிழப்புஜெனரேட்டரை இயக்கிவிட்டு தூங்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

புபுரஸ்ஸ நெஸ்டா காலனியை சேர்ந்த, 40 வயதுடைய சனத் ரோஹன மற்றும் 17 வயதுடைய ககன மதுசங்க ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு புபுரஸ்ஸ நகரில் வியாழக்கிழமை (23) அன்று உணவு வழங்கும் நிகழ்வு நடாத்துவதற்கு ஆயத்தமாகியிருந்ததால் , அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தனது அறையில் ஜெனரேட்டர் இயந்திரத்தை இயக்க வைத்து குறித்த தந்தையும் , மகனும் உறங்கச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் புபுரஸ்ஸ காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது, ​​ ஜெனரேட்டரில் இருந்து வந்த கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது .

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புபுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அறையில் ஜெனரேட்டர் இயந்திரத்தை இயக்க வைத்துவிட்டு தூங்கிய தந்தை (40) மற்றும் மகன் (17) உயிரிழப்பு அறையில் ஜெனரேட்டர் இயந்திரத்தை இயக்க வைத்துவிட்டு தூங்கிய தந்தை (40) மற்றும் மகன் (17) உயிரிழப்பு Reviewed by Madawala News on May 23, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.