பாடசாலை மதிய உணவு ஒப்பந்தந்தத்தை தொடர சமையல்காரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் பெற முயற்சித்த பாடசாலை அதிபர் கைதுஎஹலியகொட பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் 30,000 ரூபாய் கையூட்டலைப் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் மதிய நேர உணவை வழங்குவதற்காக பதிவு செய்திருந்த நபரொருவரிடம் இருந்தே குறித்த அதிபர் கையூட்டலைப் பெற முயற்சித்துள்ளார்.

மதிய நேர உணவு வழங்கும் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமாயின் தமக்கு பணம் வழங்குமாறு சந்தேகநபரான பாடசாலை அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்படி, அவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலை மதிய உணவு ஒப்பந்தந்தத்தை தொடர சமையல்காரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் பெற முயற்சித்த பாடசாலை அதிபர் கைது பாடசாலை மதிய உணவு ஒப்பந்தந்தத்தை தொடர சமையல்காரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் பெற முயற்சித்த பாடசாலை அதிபர் கைது Reviewed by Madawala News on May 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.