ஆழ்கடலில் தத்தளித்த 3 வாழைச்சேனை மீனவர்களை காப்பாற்றிய கடற்படையினர்; ஒருவர் ஜனாஸாவாக மீட்பு.(எஸ்.அஷ்ரப்கான்)

வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி ஆழ்கட
லில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இயந்திர படகு ஒன்று
உடைந்து அது நீரில் மூழ்கியதையடுத்து, கடலில் தத்தளித்த 
3 மீனவர்களை உயிருடனும் ஒருவரை ஜனாஸாவாகவும் நேற்று (17)
வெள்ளிக்கிழமை மாலையில் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
ஒருவர் காணாமல் போயுள்ளார் என வாழைச்சேனைப் 
பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை நிந்தவூர் 9 ஆம் பிரிவு அரசடி மையவாடி 
வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அலியார் 
இபிறாலெப்பை என்பவரே ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்
ளார்.

கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள் வாழைச்சேனை 
மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்
பதற்காகக் கடந்த 12 ஆம் திகதி கடலுக்கு இயந்திர படகு 
ஒன்றில் சென்றுள்ளனர்.
ஆழ்கடலில் படகு உடைந்து நீரில் மூழ்கியதைய
டுத்து அதில் இருந்த மீனவர்கள் தப்பி கடலில் தத்தளித்து 
கொண்டிருந்தனர். 

கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் 
மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தமையை 
நேற்று (17) வெள்ளிக்கிழமை மாலை கண்டனர். தத்தளித்
துக் கொண்டிருந்த 3 மீனவர்களை உயிருடனும் ஒரு
வரை ஜனாஸாவாகவும் மீட்டனர். ஒருவர் காணாமல் போயுள்
ளார்.
இதில் உயிருடன் மீட்டகப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலை
யில் இருந்தமையையடுத்து அவரை திருகோணமலை 
கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்று வைத்தியசா
லையில் அனுமதித்துள்ளனர். 
ஏனைய இருவரையும் மற்றையவரின் உடலையும் 
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று இரவு 
கடற்படையினர் கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைத்துள்
ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து உடல் வாழைச்சேனை வைத்தியசா
லையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. 

இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலி
ஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
ஆழ்கடலில் தத்தளித்த 3 வாழைச்சேனை மீனவர்களை காப்பாற்றிய கடற்படையினர்; ஒருவர் ஜனாஸாவாக மீட்பு. ஆழ்கடலில் தத்தளித்த 3 வாழைச்சேனை மீனவர்களை காப்பாற்றிய கடற்படையினர்; ஒருவர் ஜனாஸாவாக மீட்பு. Reviewed by Madawala News on May 18, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.