இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்றனர்.2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தாதியர், விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய மூன்று துறைகளிலும் இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைகளைப் பெற முடியும்.

அதன்படி, தாதியர் தொழிலுக்கு 409 பேரும், கட்டுமானத் துறைக்கு 804 பேரும், விவசாயத் துறைக்கு 1558 பேரும் வெளியேறியுள்ளனர். மேலும், மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் மேலும் 172 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைக்காகச் செல்ல உள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் 1,912 இலங்கையர்கள் மாத்திரமே இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர், இதன்படி இந்த ஆண்டு இஸ்ரேலுக்கு வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்றனர். இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்றனர். Reviewed by Madawala News on May 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.