மேல் மாகாண யுக்திய நடவடிக்கையில் சிக்கிய 25 பெண்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்தது.மேல் மாகாணம்,
பேலியகொடை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 25 விபச்சாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது .


போதைப்பொருள் பாவனைக்காக விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு , கைது செய்யப்பட்ட 25 பெண்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் இவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது .

இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது இவர்கள் கொனோரியா, ஹெர்பெஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது .

சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அழித்து மறுவாழ்வு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், இந்த பெண்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வைத்திய பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு பேலியகொடை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
மேல் மாகாண யுக்திய நடவடிக்கையில் சிக்கிய 25 பெண்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்தது. மேல் மாகாண யுக்திய நடவடிக்கையில் சிக்கிய 25 பெண்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்தது. Reviewed by Madawala News on May 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.