2022 இல் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்தில் கைதாகி பிணையில் வெளிவந்த நபர் இன்று தனது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு வந்த போது அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு.. மாத்தறை, வெலிகம, படவல, பத்தேகம மாதிரி ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை  (27) துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  தனது இரண்டு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் படவல பத்தேகம மாதிரி கனிஷ்ட கல்லூரிக்கு வந்த போது இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ஹரக் கட்டாவின் குழுவை  சேர்ந்த ஒருவரே ஆவார் , அவர் 20.01.2022 அன்று மிதிகம துர்க்கி கிராமத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

  பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், துப்பாக்கிச் சூடு நடந்த சாலையில் வெற்றுத் தோட்டா உறை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார், வெலிகம பொலிஸாருடன் இணைந்து   பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2022 இல் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்தில் கைதாகி பிணையில் வெளிவந்த நபர் இன்று தனது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு வந்த போது அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு.. 2022 இல் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்தில் கைதாகி பிணையில் வெளிவந்த நபர் இன்று  தனது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு வந்த போது அவரை நோக்கி  துப்பாக்கிச் சூடு.. Reviewed by Madawala News on May 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.