200 ஆலிமாக்களையும் பல ஆசிரியைகளையும் உருவாக்கிய பஸ்யால - எல்லலமுல்லை இப்னு உஸைமீன் மகளிர் அரபிக்கல்லூரியில் புதிய மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.பஸ்யால எல்லலமுல்லையில் இயங்கி வரும் இப்னு உஸைமீன் மகளிர் அரபிக் கல்லூரியானது 2012 /03/03 அன்று45 மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.


நான்கு வருட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் இக்கல்லூரியானது க/ பொ/ த. சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளை உள்வாங்கி அவர்களுக்கான இஸ்லாமிய ஷரியா கல்வியுடன் கலைத்துறையில் உயர்தர பரீட்சைக்கான பாடத்திட்டங்களையும் போதித்து வருகிறது.


அத்தோடு மேலதிகமாக இங்கே பெண்களுக்கு தேவையான தையல் கலை, சமையல் கலை, அதே போன்று ICT, சிங்களம் ஆங்கிலம் ஆகிய மேலதிக பாடத்திட்டங்களும் உள்ளடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கல்லூரியில் இதுவரை சுமார் 200 ஆலிமாக்கள் வெளியாகி உள்ளனர் .இவர்களில் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புகளை பெற்றவர்களும் மேலும் பிரச்சாரத் துறையில் ஈடுபடக் கூடியவர்களும் உள்ளடங்குவர்.

இக்கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலில் அமைந்துள்ளதும் மேலும் இக்கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய ஆலிமாக்கள் ஆசிரியைகளாக கடமையாற்றுவதோடு
இக்கல்லூரியின் ஸ்தாபகர்களான
அஷ்ஷேக் முஸ்தபா ஜவாத் (மதனி) அஷ்ஷேக் அஸ்வர் ஹனீபா (ரியாதி) அஷ்ஷேக் நஜ்முல்ஹுஸைன் (அப்பாசி)
ஆகியோர் நிர்வாகிகளாகவும் ஆசிரியர்களாகவும் கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது
அத்தோடு அஷ்ஷேக் ரமீஸ் (ரியாதி)
அஷ்ஷேக் ஜமால் (மதனி) ஆகியோரும் இங்கு விரிவுரையாளர்களாக கடமையாற்றுகின்றார்கள் .
மேலும் இக்கல்லூரி யானது எந்த நேரத்திலும் வந்து செல்லக்கூடிய போக்குவரத்து வசதிகளை கொண்ட பாதையில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விண்ணப்ப படிவம் : 200 ஆலிமாக்களையும் பல ஆசிரியைகளையும் உருவாக்கிய பஸ்யால - எல்லலமுல்லை இப்னு உஸைமீன் மகளிர் அரபிக்கல்லூரியில் புதிய மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். 200 ஆலிமாக்களையும் பல ஆசிரியைகளையும் உருவாக்கிய பஸ்யால - எல்லலமுல்லை இப்னு உஸைமீன் மகளிர் அரபிக்கல்லூரியில் புதிய மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். Reviewed by Madawala News on May 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.