இந்த ஆண்டு மே தினக் கூட்டங்கள், பேரணிகளுக்காக இலங்கை அரசியல் கட்சிகள் சுமார் 200 கோடி ரூபாய்களை செலவழித்தது.இந்த ஆண்டு மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்காக அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


பணவீக்கச் சூழல் காரணமாக, வரலாற்றில் அதிகப் பணத்தைச் செலவழித்து மே பேரணிகளை ஏற்பாடு செய்ய நேர்ந்ததாக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.


மே மாதக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வருவதற்கான போக்குவரத்துச் செலவுகளுக்காக அரசியல் கட்சிகள் இம்முறை அதிகப் பணத்தைச் செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மீதிப் பணம் மேடை அமைப்பது, ஒலிபெருக்கி, விளக்குகள் அமைத்தல், கூட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை அலங்கரித்தல், கட்சிக்காரர்களுக்கு உணவு, பானங்கள் வழங்குதல் போன்றவற்றுக்குச் செலவிடப்பட்டுள்ளது.


மே பேரணிகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்ததற்கான செலவுகளில் கட்சித் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு பரோபகாரர்களும்
உதவியதாகக் கூறுகின்றனர்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கொண்டாட்டத்திற்காக இவ்வருடமே அதிகளவான பணம் செலவிட நேரிட்டதாக தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டங்கள் இம்முறை நான்கு மாவட்டங்களில் நடைபெற்றதால் செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேடை, ஒலிபெருக்கிகள், விளக்கு அமைப்புகள் மற்றும் சில சிறு விளம்பரச் செயற்பாடுகளுக்கான செலவுகளை மாத்திரமே கட்சித் தலைமையகம் ஏற்கும் எனவும் ஏனைய அனைத்துச் செலவுகளையும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டாக ஏற்கும் எனவும் சில்வா தெரிவித்தார்.
இந்த ஆண்டு மே தினக் கூட்டங்கள், பேரணிகளுக்காக இலங்கை அரசியல் கட்சிகள் சுமார் 200 கோடி ரூபாய்களை செலவழித்தது. இந்த ஆண்டு மே தினக் கூட்டங்கள், பேரணிகளுக்காக இலங்கை அரசியல் கட்சிகள் சுமார் 200 கோடி ரூபாய்களை செலவழித்தது. Reviewed by Madawala News on May 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.