அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் வழக்கில் இருந்து அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை . 2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு மூலம், அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக    இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கையளிக்க முடியாது மற்றும் பராமரிக்க முடியாது என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.


இந்நிலையில் முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவாளிகளை விடுதலை செய்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் வழக்கில் இருந்து அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை . அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் வழக்கில் இருந்து அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை . Reviewed by Madawala News on May 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.