நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் 18, 20 வயதுடைய இருவர் உயிரிழப்பு.நேற்று மிரிஹான கிம்புலாவல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பலத்த காயங்களுக்கு உள்ளான இரு சாரதிகளும் களுபோவில ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை மற்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்கள் மிரிஹான மற்றும் மடிவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் 18, 20 வயதுடைய இருவர் உயிரிழப்பு. நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் 18, 20 வயதுடைய இருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on May 06, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.