அம்பாறை – அக்கறைப்பற்று வீதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 23 பேர் காயம்.பாறுக் ஷிஹான்

இரண்டு பேருந்துகள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் அம்பாறை - கல்ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (03) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் பாடசாலை சேவை பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின.

இதன் போது குறித்த விபத்தில் மாணவர்கள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்களும் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை – அக்கறைப்பற்று வீதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 23 பேர் காயம். அம்பாறை – அக்கறைப்பற்று வீதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 23 பேர் காயம். Reviewed by Madawala News on May 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.