"ஸ்டெம்" அணுகு முறை ஊடாக "அல்குர்ஆன் தஜ்வீத்" கற்கையில் பாண்டித்தியம் பெற்ற உலகின் முதல் சிறுமியாக தன்னை சான்றுப்படுத்தினார் சாய்ந்தமருதை பூர்விகமாக கொண்டு இங்கிலாந்தில் வசித்து வரும் மர்யம் ஜெஸீம் "ஸ்டெம்" அணுகு முறை ஊடாக "அல்குர்ஆன் தஜ்வீத்" கற்கையில் பாண்டித்தியம் பெற்ற உலகின் முதல் சிறுமியாக தன்னை சான்றுப்படுத்தி சர்வதேச புகழ் பெற்ற "ஸ்டெம்"விருதினை வென்றது மட்டுமன்றி ; இளம் வயதில் பல்துறைகளில் வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி வருங்கால சந்ததிக்கும் , சமூகத்துக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றமைக்காக கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதை பூர்விகமாக கொண்டு இங்கிலாந்தில் வசித்து வரும் மர்யம் ஜெஸீம் இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிகழவிருக்கும் 2024 ஆம் ஆண்டின் "இன்ஸ்பயர் விருதுகள் " நிகழ்வில் "பல்துறைசார் நட்சத்திரம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார் .


2024 ஆண்டின் வெற்றியாளர்களை தெரிவு செய்யும் குழுவில் மறைந்த மகாராணியாரின் உயர் கௌரவ விருதுகளை வென்ற பேராசிரியர் பில் புக்கனன் OBE, ரோகினி ஷர்மா ஜோஷி OBE, ஜெய் ஏனுகு மற்றும் பிரிஜ் காந்தி, MBE போன்ற புகழ்பெற்ற பிரமுகர்கள் அடங்கி இருந்தனர் . பிரித்தானியாவில் இருந்து கிடைக்கப் பெற்ற பல நூற்றுக்கணக்கான பரிந்துரை விண்ணப்பங்களில் இருந்து கடுமையான மதிப்பீட்டு அளவியல் செய்யப்பட்டு இவ்விருதினை பெற தகுதியான வெற்றியாளராக மர்யம் ஜெஸீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .


ஸ்டெம் கல்வி (Science, Technology, Engineering, Mathematics ) முறை என்பது விஞ்ஞரனம் , தொழில்நுட்பம் , பொறியியல் மற்றும் கணிதம் துறைகளை ஒருங்கிணைத்த கல்வி முறை ஆகும் .


பல்துறை ஆற்றல்கள் மூலம் முன்மாதிரியாக செயற்படும் பிரித்தானியாவில் வாழும் இளம் வயது சாதனையாளர்களை இனங்கண்டு கௌரவிக்கும் நோக்கில் இன்ஸ்பயர் விருதுகள், கடந்த ஆண்டு ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் பிரித்தானிய இளைஞர் சர்வதேச பயிற்சி கல்லூரியின் ஸ்தாபகர் கலாநிதி ராஸ்மி மன்றி அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .


இலங்கையில் கட்டாய ஜனாஸா எரிப்பு நடைபெற்ற போது இங்கிலாந்தின் பல்வேறு தொலைக்காட்சி சேவைகளில் தோன்றி சூசகமாக தனது கருத்துக்களை கூறி இலங்கை அரசின் கொள்கைகளை மாற்ற தன்னாலான பங்களிப்பை வழங்கியமைக்காக பிரித்தானிய முஸ்லீம் அமைப்புக்களின் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் சேர் இக்பால் சாக்ரைனின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.


அத்துடன் இங்கிலாந்தின் கொன்செர்வ்டிவ் கட்சியின் பிராக்ஸிட் கொள்கைக்கு எதிராக தனது ஆதங்கத்தை தெரிவித்து எழுதிய கடிதத்துக்கு முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனிடமிருந்து பதில் மடலையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .


12 வயது நிரம்பிய பன்முக ஆளுமையாக மிளிரும் மர்யம் ஜெஸீம் இலங்கையின் சாய்ந்த மருதை சேர்ந்த பெற்றோருக்கு மகளாக பிறந்த பிரித்தானிய பிரஜை ஆவார் . தாய் புதிய திருமண பந்தத்தில் இணைந்து வாழும் நிலையில் தந்தையின் அரவணைப்பில் கடந்த ஏழு வருடங்களாக வாழ்ந்து வருகிறார் . தனது ஒன்பது வயதில் ஐக்கிய ராஜ்யத்தில் "அதி சிறந்த அல் குர்ஆன் ஓதுனர் " ( அல் காரியா ) மகுடத்தை தேசிய அல் குர்ஆன் போட்டியில் கலந்து கொண்டு வென்றதுடன் ; பல்வேறு சமூக கல்வி கலாசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரலாற்று சிறப்பு மிக்க விருதுகளையும் வென்று பல சாதனைகளை படைத்து வருகிறார்.

"ஸ்டெம்" அணுகு முறை ஊடாக "அல்குர்ஆன் தஜ்வீத்" கற்கையில் பாண்டித்தியம் பெற்ற உலகின் முதல் சிறுமியாக தன்னை சான்றுப்படுத்தினார் சாய்ந்தமருதை பூர்விகமாக கொண்டு இங்கிலாந்தில் வசித்து வரும் மர்யம் ஜெஸீம் "ஸ்டெம்" அணுகு முறை ஊடாக "அல்குர்ஆன் தஜ்வீத்" கற்கையில் பாண்டித்தியம் பெற்ற உலகின் முதல் சிறுமியாக தன்னை சான்றுப்படுத்தினார் சாய்ந்தமருதை பூர்விகமாக கொண்டு இங்கிலாந்தில் வசித்து வரும் மர்யம் ஜெஸீம் Reviewed by Madawala News on April 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.