தூய அரசியல் கலாச்சாரமென்பது சட்டம் இயற்றி செயற்படுத்தப்பட வேண்டும்


தூய அரசியல் கலாச்சாரமென்பது  சட்டம் இயற்றி செயற்படுத்தப்பட வேண்டியதொன்று. 

உண்மையில் நாட்டில் மக்கள் மயப்படுத்தப்பட்ட யாப்பு இல்லை என்பதும்  இதனாலேயே பெளத்த சமயத்திற்கும் சிங்கள இனத்தவருக்கும் வழங்கபடும் சலுகைகள் ஏனைய இனத்தவருக்கு கிடைக்காமல் போவதற்கான காரணமாகும் அதுவரைக்கும் சிங்கள மேலாதிக்க நிலையை தக்கவைத்து, அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமிக்கும் அத்துமீறல்கள் தொடரும் எனவும்  முன்னால் மாகாண சபை உறுப்பினர் ULM முபீன் தெரிவித்தார். 


பெப்ரல் மற்றும் March 12 moment அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வாரம்  மட்டக்களப்பு கிரீன் கார்டன் ஹோட்டலில் இடம்பெற்ற தூய அரசியலுக்கான மாவட்ட மட்ட கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்தார். நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ULM முபீன், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் MA.பெரோஸ்,  கட்சியின் ஏறாவூர் பிரமுகர் அசனார் JP, மற்றும் காத்தான்குடி முன்னாள் நகரபிதா மர்சூக் அஹமட்லெப்பை அவர்களும் கலந்துகொண்டனர்.


 தொடர்ந்தும் உரையாற்றுகையில் தேர்தல்  முறையிலும் மாற்றம் வேண்டும், வன்முறையை,வெட்டுக்குத்து தொற்றுவிக்கின்ற,ஒரே கட்சிக்குள் பணத்தை செலவழித்து அதிக விருப்பு வாக்குகளுடன் இலகுவாக ஆசனத்தை பெற்றுக்கொள்ளும் படியான இந்த விருப்பு வாக்கு தேர்தல் கொள்கையிலும் மாற்றம் வேண்டும் என்பதாக வலியுறுத்தினார்.


தற்போது தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்தும்விதமான சட்டம் இயற்றப்பட்டு எங்களுக்கும் கையேடுகள் கிடைக்கப்பெற்றன. இது வரவேற்கத்தக்க விடயம். விரைவில் அமுல் படுத்தப்பட வேண்டும் என நம்புகிறோம்.


சாராய வியாபாரிகள் போதை வியாபாரிகள் அதிக பணத்தை வாரி இறைத்து அதிகவிருப்பு வாக்குளை இலகுவாக பெற்று பாராளுமன்றம் செல்வதற்கு இந்த விருப்பு வாக்கு முறையே காரணமாக அமைந்துவிடுகிறது.


அடுத்தது இனங்களுக்கிடையில் குரோதத்தை உருவாக்கி, இன வெறுப்பை ஏற்படுத்தி மக்களை உசுப்பேற்றி அதனூடாக பாராளுமன்றம் செல்வது. 


எமது மாவடத்திலும் இந்த இன குரோத பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவது மிகவும் வருத்தத்தை தருகிறது. காலகாலமாக ஒரே சமூகமாக ஒற்றுமையாக வாழ்ந்த எமது மக்களுக்கிடையில் தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பேசி பாராளுமன்றம் செல்கின்றனர், அதேபோல முஸ்லிம்களும் தமிழர்களுக்கு எதிராக பேசி  பாராளுமன்றம் செல்கின்றனர். இவை நிறுத்தப்பட வேண்டும்.

 கேட்டாள் நான் தமிழர்களுக்கான எம்பி என்கிறார் அவர், நான் முஸ்லிம்களுக்கான எம்பி என்கிறார் இவர். இலங்கையிலிருக்கும் இரண்டு கோடி நாற்பது லட்சம் மக்களுக்கும் உரித்தானவர்களே இந்த 225 பிரதிநிதிகளும்  என்பதை மறந்து இனவாதத்தை கையிலெடுத்துக்கொண்டு செயற்படும் இவர்களே நாட்டின் பின்னடைவுகளுக்கு பிரதான காரணம் என்பதை சுட்டிக்காட்டினார்.


இங்கு எமது மாவட்டத்தில் பிரிந்து நின்று இனம் சார்ந்து செயற்படுகின்ற முறையையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். கடந்த தேர்தலின் போது தமிழர் கட்சி ஒன்று முஸ்லிம்  ஒருவரையும் தங்களது வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டிருந்த வேளையில், இறுதி நேரத்தில் அவரது பெயர் அகற்றப்பட்டிருந்தது. காரணம் தேர்தலில் நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பேசித்தான் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறோம் இதன்போது எமது வேற்பாளரும் இருந்தால் அது சங்கடத்தை உருவாக்கலாம் என்ற காரணத்தை கூறி இருந்தார்களாம் சக வேட்பாளர்கள் என அக் கட்சியின் பிரதானி ஒருதரே  என்னிடம் இதை கூறியிருந்தார் என நினைவூட்டினார் ULM முபீன்.


அரசியல் கட்சிகளுக்கிடையில் சந்திப்புகளை ஏற்படுத்துவது போன்று

மக்களையும் சந்தித்து அவர்களுக்கிடையில் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி பிழையான அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராக மக்களை விழிப்பூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும்

பெப்ரல் மற்றும் March 12 moment அமைப்பினரிடம் முன்வைத்தார். 

எத்தகைய வேட்பாளர்களை தெரிவு செய்யவேண்டும், அவர்களது தகமைகள் எவ்வாறு இருக்கவேண்டும், பணம் அவர்களது குடும்ப செல்வாக்கு போன்ற கவர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும், 

பாராளுமன்றம் சட்டத்துறையின் பிரதான பகுதி என்பதனால்

எமது  பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சட்ட பின்புலத்தை கொண்ட ஒருவராக இருத்தல் சிறப்புக்குரியது போன்ற ஆலோசனைகளையும் எடுத்துரைத்தார்.

 ஊடக பிரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

காத்தான்குடி.தூய அரசியல் கலாச்சாரமென்பது சட்டம் இயற்றி செயற்படுத்தப்பட வேண்டும் தூய அரசியல் கலாச்சாரமென்பது சட்டம் இயற்றி செயற்படுத்தப்பட வேண்டும் Reviewed by Madawala News on April 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.