6 பேர் சென்ற வாகனம், குருநாகல் - புத்தளம் பிரதான வீதியில் விபத்து... #சாரதியின் தூக்க கலக்கம் விபத்தில் முடிந்ததுகுருநாகல் - புத்தளம் பிரதான வீதியில் வாரியபொல, பாதெனிய பிரதேசத்தில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 80 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கம்பளை பகுதியிலிருந்து புத்தளம் தப்போவ பகுதிக்கு சென்று கொண்டிருந்த சிறிய ரக வேன் ஒன்று சாரதி நித்திரையினால் அருகில் இருந்த கல் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தின் போது அதில் ஆறு பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் 2 வார குழந்தையொன்றும் உள்ளடங்கியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்கள் நிகவெரட்டிய மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

6 பேர் சென்ற வாகனம், குருநாகல் - புத்தளம் பிரதான வீதியில் விபத்து... #சாரதியின் தூக்க கலக்கம் விபத்தில் முடிந்தது 6 பேர் சென்ற வாகனம், குருநாகல் - புத்தளம் பிரதான வீதியில் விபத்து... #சாரதியின் தூக்க கலக்கம் விபத்தில் முடிந்தது Reviewed by Madawala News on April 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.