பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான, பொலிஸ் அதிகாரியின் மகனின் உடல் பாகம் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.மதவாச்சி காவற்துறையின் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட ஆறு உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் படுகாயமடைந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் பாகம் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.


மெதவச்சிய துலாவெல்லிய பகுதியைச் சேர்ந்த திலிஷா சங்கீத் என்ற இளைஞனே காயமடைந்துள்ளார்.


பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் தந்தையும் பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.


சம்பவம் தொடர்பில் கபிதிகொல்லாவ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள சமன் விக்கிரமநாயக்கவின் ஆலோசனையின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 7ம் தேதி இந்த தாக்குதல் நடந்தது.


குறித்த இளைஞன், தான் லொறியில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் லொறியை நிறுத்தி தன்னையும் தன் நண்பரையும் கை கால்களை கட்டி வாகனத்தினுள் வீசி தாக்கியதாக
பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான, பொலிஸ் அதிகாரியின் மகனின் உடல் பாகம் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான, பொலிஸ் அதிகாரியின் மகனின் உடல் பாகம் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. Reviewed by Madawala News on April 11, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.