பொலிஸாரின் உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்ற மாட்டு லொரி மீது துப்பாக்கிச் சூடுமாத்தறையில் பெலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது பாரவூர்தியில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கனங்கே ரஜமஹா விகாரைக்கு அருகில் மாடுகளை ஏற்றிச் செல்வதை அவதானித்த இரவு நேர கண்காணிப்பு பொலிஸ் குழுவொன்று, பாரவூர்தியை தொலேலியத்த பிரதேசத்தில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.இருப்பினும், உத்தரவை மீறி தொடர்ந்து பயணித்ததால் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது மாத்தறை, கனங்கே, தொலேலியத்த பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதன் போதே பாரவூர்தியில் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்ததுடன் மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர். கிங்தோட்டை, மாபுகல பகுதியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.சந்தேகநபர் தற்போது சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரின் உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்ற மாட்டு லொரி மீது துப்பாக்கிச் சூடு பொலிஸாரின் உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்ற மாட்டு லொரி மீது துப்பாக்கிச் சூடு Reviewed by Madawala News on April 11, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.