சட்டவிரோதமான முறையில் 8 மாடுகளை கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் அதிரடி படையினரால் கைது. யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர், வியாழக்கிழமை (04) அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


பொலிஸ் அதிரடி படையினரால்  , பண்ணை சுற்றுவட்ட பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது  சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனமொன்றை  வழிமறித்து சோதனையிட்ட போது , வாகனத்தினுள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 08 மாடுகள் காணப்பட்டுள்ளன. 


அதனை தொடர்ந்து வாகனத்தில் இருந்த மூவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, அதில் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும்  குறித்த மூவரும் புங்குடுதீவு பகுதிக்கு வாகனத்தில் சென்று மாடுகளை களவாடி அவற்றின் கால்களை கட்டி , கொடுமைப்படுத்தும் முகமாக வாகனத்தில் ஏற்றி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 


மேலும்  , அதிரடி படையினரால்  குறித்த  மூவரையும் கைது செய்துள்ளதுடன் மாடுகள் மற்றும் வாகனத்தினையும் மீட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் 8 மாடுகளை கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் அதிரடி படையினரால் கைது.  சட்டவிரோதமான முறையில் 8 மாடுகளை கடத்தி சென்ற  பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் அதிரடி படையினரால் கைது. Reviewed by Madawala News on April 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.