மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.. பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் நான்கு மில்லியன் எனவும், அதில் வயதுக்கு வந்த மாணவிகள் சுமார் 1.2 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.


அந்த மாணவிகளில், மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள், மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் படிக்கும் 800,000 மாணவிகளுக்கு ஏப்ரல் 2024 முதல் ஆண்டுதோறும் இலவச சுகாதார சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கல்வி அமைச்சரின் முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


சிறுமிகளுக்கு 1,200 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.. மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க  அமைச்சரவை அனுமதி வழங்கியது.. Reviewed by Madawala News on April 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.