சாய்ந்தமருதில் ஸகாத் வழங்கும் நிகழ்வு - 102 பயனாளிகளுக்கு பணமாகவும் தொழில் செய்வதற்கான உபகரணமாகவும் வழங்கி வைப்பு.(எம்.எஸ்.எம். ஸாகிர்)

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் கீழ் இயங்கும் பைத்துல் ஸகாத் நிதியத்தின் 2023ஆம் ஆண்டின் இரண்டாம் கட்ட ஸகாத் வழங்கும் நிகழ்வு நேற்று (04) வியாழக்கிழமை சாய்ந்தமருது பள்ளிவாசல் முன்றலில்  இடம்பெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப்  பள்ளிவாசல் 

நம்பிக்கையாளர் சபைத்  தலைவரும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவருமான ஏ.ஹிபத்துல் கரீமின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் பிரதித் தலைவர்களான மௌலவி எம்.எம்.எம்.சலீம், மௌலவி ஐ.எல்.எம்.ரஃபி (ஹிழ்ரி), பைத்துஸ் ஸகாத் செயலாளர் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் யூ.எல்.எம். ஹனீபா, பொருளாளர் பிரதேச செயலக ஓய்வுபெற்ற நிதி உதவியாளர் யூ.எல்.எம். ஹனீபா, பைத்துஸ் ஸகாத் பணிப்பாளர் எம்.ஐ.எம். அஷ்ரப், உப செயலாளர் எம்.சி.எம். அன்வர், மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், மரைக்காயர்மார்கள், பைத்துஸ் ஸகாத்தில் பணிபுரியும் ஏ.ஏ.சமட் உட்பட பைத்துஸ் ஸகாத் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 102 பயனாளிகளுக்கு இதன்போது பணமாகவும் தொழில் செய்வதற்கான உபகரணங்களும் நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
சாய்ந்தமருதில் ஸகாத் வழங்கும் நிகழ்வு - 102 பயனாளிகளுக்கு பணமாகவும் தொழில் செய்வதற்கான உபகரணமாகவும் வழங்கி வைப்பு. சாய்ந்தமருதில் ஸகாத் வழங்கும் நிகழ்வு - 102 பயனாளிகளுக்கு பணமாகவும் தொழில் செய்வதற்கான உபகரணமாகவும் வழங்கி வைப்பு. Reviewed by Madawala News on April 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.