தகாத தொடர்பில் இருந்த இருவர் வீடொன்றில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பதிவுஉடப்புஸ்ஸலாவ - மடுல்ல பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்கள் இன்று (6) காலை மீட்கப்பட்டதாக உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான டப்ளியூ.எம்.பிரியங்கனி (வயது 42) மற்றும் திருமணமாகாத ஆண் பி.எம்.அனுர பண்டார (வயது 39) ஆகிய இருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.


இதில், உயிரிழந்துள்ள இருவருக்கும் தகாத உறுவு இருந்து வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.


அதேநேரத்தில் இவ் இருவருக்குமிடையில் இருந்து வந்த தகாத உறவு பெண்ணின் கணவருக்கு தெரிய வந்த நிலையில் கடந்த4ஆம் திகதி மாலை தாக்குதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.


இதையடுத்து குறித்த பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி குறித்த நபருடன் சென்றுள்ள நிலையில் இவ் இருவரும் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தகாத தொடர்பில் இருந்த இருவர் வீடொன்றில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பதிவு தகாத தொடர்பில் இருந்த இருவர் வீடொன்றில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பதிவு Reviewed by Madawala News on April 06, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.