''அலவந்தி தங்க இளவரசிக்கு'' தீ வைக்கபட்டதா ? தீப்பிடித்ததா ? கொட்டாஞ்சேனை, மோதர அளுத் மாவத்தை பாலத்திற்கு அருகில் நேற்று (03) காலை லேலண்ட் தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


அலவந்தி தங்க இளவரசி என்ற பெயரால்  அனைவராலும் அறியப்படும் இந்த தனியார் பேருந்து களனி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது எனவும், கண்டிக்கு. யாத்திரை செல்லவிருந்த நபர்களை ஏற்றிக்கொண்டு மோதரை பிரதேசத்திற்கு அதிகாலை 5.00 மணியளவில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


மோதர அளுத் மாவத்தை பகுதியில் பஸ் வண்டியை வழியிலேயே நிறுத்திவிட்டு, சாரதியும் உதவியாளரும் தேநீர் அருந்த அருகாமையில் உள்ள உணவகத்திற்குச் சென்றபோது, ​​புகை மூட்டத்துடன் பஸ் தீப்பிடித்து எரிவதைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பீதியடைந்த சாரதி மற்றும் நடத்துனர் மற்றும் துறைமுக பொலிஸில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கும் தீயணைப்பு சேவை திணைக்களத்திற்கும் சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.பொலிசார் தெரிவித்தனர்.


கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


தீயை அணைத்த போதும், பேருந்து பலத்த எரிந்து சேதம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும், திடீர் தொழில்நுட்ப கோளாறு அல்லது தனிப்பட்ட தகராறு காரணமாக யாரோ பேருந்திற்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

                          

 பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு.நிஷாந்த குமார அவர்களின் பணிப்புரையின் பேரில் குற்றப் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அரவிந்த அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

''அலவந்தி தங்க இளவரசிக்கு'' தீ வைக்கபட்டதா ? தீப்பிடித்ததா ? ''அலவந்தி தங்க இளவரசிக்கு''  தீ வைக்கபட்டதா ? தீப்பிடித்ததா ? Reviewed by Madawala News on April 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.