இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையின் சுயாதீன அறிவிப்பாளராக நியமனம் பெற்றார் லைலா அக்ஷியா- ஐ. ஏ. காதிர் கான் -

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவைப் பிரிவின் சுயாதீன அறிவிப்பாளராக லைலா அக்ஷியா நியமனம் பெற்றார்.
வானொலி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து குரல் கொடுத்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வலம் வரும் லைலா அக்ஷியா, தேசிய பத்திரிகைகளிலும் பல உள்ளூர் மற்றும் வெளியூர் சஞ்சிகைகள், புத்தகங்களிலும் உளவியல் கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்.
அண்மையில், பன்னாட்டுக் கவிஞர்களின் உலக சாதனை நூலில், இவரது 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பின் மூலம், இலங்கைக் கவிஞர்களின் பெயர்ப் பட்டியலில் இவர் சாதனை படைத்திருக்கிறார். இதற்காக இவருக்கு சமீபத்தில், இந்தியாவில் "உலக சாதனை விருது" வழங்கப்பட்டது.
தெஹிவளையைப் பிறப்பிடமாகவும், மொறட்டுவையை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள லைலா அக்ஷியா, இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்த பாவா மொஹிதீன் - ஷாஹிதா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியுமாவார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையின் சுயாதீன அறிவிப்பாளராக நியமனம் பெற்றார் லைலா அக்ஷியா இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையின் சுயாதீன அறிவிப்பாளராக நியமனம் பெற்றார் லைலா அக்ஷியா Reviewed by Madawala News on April 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.