பெண்கள் தனியாக சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்தது.உலகில் தற்போது வாழும் பெண்களில் அதிகளவானோர் தனியாக சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்வதை விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

புதிய நண்பர்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களைத் தேடி முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது அதிகமான பெண்கள் தொலைதூர சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், தனியாக பயணிக்கும் பெண்கள் அதிகளவில் செல்ல விரும்பும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

1. இலங்கை (Sri Lanka)
இதன்படி, இதன் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. சிறிய கண்ணீர்த்துளியை போல் உள்ள இலங்கை, தனித்துவமான அழகை கொண்டுள்ளது.

தெற்காசியாவில் நீராட விரும்பும் பெண் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை இலங்கையின் தனித்துவம் ஈர்த்துள்ளது.

தம்புள்ளை மற்றும் சிகிரியா போன்ற பழங்கால தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இலங்கைக்கு பயணிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அத்துடன், நுவரெலியாவில் உள்ள தேயிலை தோட்டங்களைப் பார்வையிடவும், அறுகம் பே, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ போன்ற கடற்கரைகளில் தங்கள் நேரத்தை செலவிடவும் வெளிநாட்டு பெண் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.
பெண்கள் தனியாக சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்தது. பெண்கள் தனியாக சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்தது. Reviewed by Madawala News on April 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.