ஷஷாங் சிங் - சினிமாக் கதைகளை மிஞ்சும் ஓர் நிஜக் கதை...


ஷஷாங் சிங் - சினிமாக் கதைகளை மிஞ்சும் ஓர் நிஜக் கதை...

By: Pugal mahendiran

ஐபிஎல் தொடரில் ஆடு மாடுகளைப் போல் விளையாட்டு வீரர்களை ஏலம் எடுப்பது வழக்கம்.

. அதுபோல் ஷஷாங் சிங் என்ற வீரரை பஞ்சாப் அணி ஏலம் எடுக்கிறது.. ஏலம் எடுத்த பின் தான் தெரிகிறது தாங்கள் எடுக்க நினைத்த ஷஷாங் வேறு இந்த ஷஷாங் வேறு என.. உடனே ஐபிஎல் நிர்வாகத்திடம் நாங்கள் மாற்றி வாங்கிவிட்டோம் என முறையிடுகிறது பஞ்சாப் அணி..

செய்தியாக இத்தகவல் வெளிவருகிறது.. அவமானமாக உணர்கிறார் ஷஷாங்..

 வீரரை இனி மாற்ற முடியாது என்பதை உணர்ந்த பஞ்சாப் அணி ஏலம் எடுக்கப்பட்ட ஷஷாங்கின் மன வலிமை குன்றிவிடக்கூடாது என்பதற்காக "நாங்கள் சரியாகத் தான் ஏலம் எடுத்தோம்.. எங்களுக்கு இவர் தான் வேண்டும்" என்று கூறி சமாளிக்கிறது..  இருப்பினும் அது சமாளிப்பு என  அனைவருக்கும் தெரிகிறது.. 

இந்நிலையில் ஐபிஎல் தொடர் தொடங்க அணியோடு இணைகிறார் ஷஷாங்.. 

இது தான் முன்கதை.. இப்பொழுது மெயின் கதைக்கு வருவோம்.. 

இந்த இடத்தில் நாம் தான் ஷஷாங் என வைத்துக்கொள்வோம்.. நம் மனநிலை எப்படி இருக்கும்??? "நம்மை நம்பாத ஒரு குழுவில் இருக்கிறோமே.. நாம் வேண்டாத விருந்தாளி தானே" என்றெல்லாம் நினைப்போம் தானே.. இதுவே நம் திறமையைக் கொன்று விடும்.. 

ஆனால் ஷஷாங் செய்தது என்ன?

வெல்லவே வாய்ப்பில்லை ஒரு கட்டத்தில் சொல்லப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான போட்டியில் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து வென்று கொடுத்திருக்கிறார்..

அடுத்த முறை இவர் ஏலத்திற்கு வந்தால் சரியாக இவர் தான் வேண்டும் என்று எடுப்பார்கள் என்பதே உண்மை.. 

ஷஷாங்கின் மனவலிமைக்கு ஒரு சல்யூட்..

#GTvsPBKS  #Shashanksingh

 அணி தோத்தாலும்  பரவாயில்லை அவர பாத்தாலே போதும் நின்னா போதும் நடந்தா போதும் என்பவர்கள் கடந்து  செல்லவும்..
ஷஷாங் சிங் - சினிமாக் கதைகளை மிஞ்சும் ஓர் நிஜக் கதை... ஷஷாங் சிங் - சினிமாக் கதைகளை மிஞ்சும் ஓர் நிஜக் கதை... Reviewed by Madawala News on April 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.