நாட்டில் காணப்படும் வெப்பநிலை மேலும் உயர்வடையக் கூடுமென காலநிலை எதிர்வு கூறப்பட்டது -நாட்டின் பல பகுதிகளில் காணப்படும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, மேற்கு, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நிலவிவரும் மழையுடனான வானிலை படிப்படையாக குறைவடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டில் காணப்படும் வெப்பநிலை மேலும் உயர்வடையக் கூடுமென காலநிலை எதிர்வு கூறப்பட்டது - நாட்டில் காணப்படும் வெப்பநிலை மேலும் உயர்வடையக் கூடுமென காலநிலை எதிர்வு கூறப்பட்டது - Reviewed by Madawala News on April 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.