மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மீது இடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்புமுல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில், திங்கட்கிழமை (29) மாலை மின்னல் தாக்கி இடி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்

மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மீதே இடி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவத்தில் ஜயங்கன்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான மூன்று பிள்ளைகளின் தந்தையான காளிமுத்து சண்முகராஜா (49) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் ,ஜயங்கன்குளம் புத்துவெட்டுவான் பகுதியை சேர்ந்த மகேந்திரன் பிரபாகரன் (26) என்ற இளைஞர்

படுகாயமடைந்த நிலையில் மல்லாவ ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஜயங்கன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மீது இடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மீது இடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு Reviewed by Madawala News on April 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.