சட்டவிரோதமாக சம்பாதித்து கொழும்பில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்தாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுதலை செய்தது நீதிமன்றம்.அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்ததன் ஊடாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.


இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

சட்டவிரோதமாக சம்பாதித்து கொழும்பில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்தாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுதலை செய்தது நீதிமன்றம். சட்டவிரோதமாக சம்பாதித்து கொழும்பில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்தாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில் மஹிந்தானந்த அளுத்கமகேவை  விடுதலை செய்தது நீதிமன்றம். Reviewed by Madawala News on April 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.