அனுராதபுர மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் போட்டியில், நாச்சியாதீவு வொரியர்ஸ் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது.நாச்சியாதீவு வொரியர்ஸ் இறுதியாட்டத்திற்கு தெரிவு

அனுராதபுர மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தால் 2023/2024 வருடத்திற்கான B பிரிவு உதைப்பந்தாட்ட லீக் போட்டியில் நாச்சியாதீவு வொரியர்ஸ் உதைப்பந்தாட்டக் கழகம் இறுதியாட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த லீக் போட்டியில் வொரியர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி எந்த வித தோல்விகளையும் சந்திக்காது இறுதியாட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாச்சியாதீவு வரலாற்றில் ஒரு அணியானது அனுராதபுர உதைப்பந்தாட்ட சங்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது அணியாகவும் சங்கத்திற்கௌகு தெரிவு செய்யப்பட்டு முதலாவது வருடத்திலே இறுதியாட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டதும் இதுவே முதல் முறையாகும். அண்மைக் காலமாக நாச்சியாதீவு வொரியர்ஸ் அணியானது பல்வேறு வெற்றிகளை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

வொரியர்ஸ் உதைப்பந்தாட்ட அணியின் வெற்றியின் பின்னணியில் பயிற்றுவிப்பாளர்களான சஹீல் அஹமட் மற்றும் மொஹமட் அப்ரித் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.
அனுராதபுர மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் போட்டியில், நாச்சியாதீவு வொரியர்ஸ் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது. அனுராதபுர மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் போட்டியில், நாச்சியாதீவு வொரியர்ஸ் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது. Reviewed by Madawala News on April 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.