இன்று நிச்சயம் கிண்ணியாவில் பிறை தெரியும்... ஆனால் க‌ர்வ‌ம் கொண்ட‌ கொழும்பு த‌லைமைக‌ள் அத‌னை ஏற்குமா என்ப‌து ச‌ந்தேக‌ம்தான்.ந‌ம‌து நாட்டில் பெரும்பாலும் த‌லைப்பிறை கிண்ணியாவிலேயே காட்சி த‌ருவ‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌?

இல‌ங்கையின் அமைப்பு என்ப‌து உல‌கின் கீழ்ப்ப‌குதியில் இந்தியாவுக்கும் கீழே உள்ள‌து.

கொழும்பு ஒரு ப‌க்க‌மும் கிண்ணியா நாட்டின் அடுத்த‌ ப‌க்க‌த்திலும் உள்ள‌து.

பிறை என்ப‌து மேற்கில் சூரிய‌ன் ம‌றையும் போது வானில் அத‌ன் இள‌ஞ்சிவ‌ப்பு நிற‌ம் தெரியும்போதுதான் பிறை காட்சி த‌ரும்.
கொழும்பை பொறுத்த‌வ‌ரை க‌ட‌ற்ப‌ர‌ப்பில் இருள் சூழாம‌ல் வெளிச்ச‌ம் ப‌ர‌விய‌ நிலையில் உள்ள‌தால் இல‌குவாக‌ 1ம் பிறையை காண‌ முடியாது.

ஆனால் கிண்ணியா என்ப‌து இன்னொரு ப‌க்க‌த்தில் இருப்ப‌தாலும் அத‌ன் மேற்கு ம‌ர‌ங்க‌ளால் சூழ‌ப்ப‌ட்டிருப்ப‌தாலும் சூரிய‌ன் ம‌றைந்து சில‌ விநாடிக‌ளில் வானில் வெளிச்ச‌மும் ம‌ர‌ங்க‌ளில் இருள் நிறைந்தும் காண‌ப்ப‌டுவ‌தால் அந்த‌ இள‌ம் இருட்டில் சிறு வெளிச்ச‌ம் ச‌ந்திர‌னில் விழுவ‌தால் பிறையை இல‌குவாக‌ காண‌ முடிகிற‌து.

ஆனாலும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் கிண்ணியாவில் காண‌ப்ப‌ட்ட‌ பிறைக‌ளை கொழும்பு த‌லைமைத்துவ‌ங்க‌ள் ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட்டு அவ‌ம‌தித்தே வ‌ந்துள்ள‌ன‌ர்.

பிறை க‌ண்ட‌ கிண்ணியா உல‌மாக்க‌ளையும் பிறை தெரியாத‌ மூட‌ர்களாக‌ க‌ருதிய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் உண்டு. இத‌ன் கார‌ண‌மாக‌ கிண்ணியா ம‌க்க‌ள் பிறை க‌ண்டாலும் இப்போதெல்லாம் அறிவிப்ப‌தில்லை.

இத‌னால்த்தான் அ.இ. ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் பிறைக்க‌மிட்டி கூட்ட‌த்தை கிண்ணியாவில் கூட்டும்ப‌டியும் நான் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சொல்லியிருந்தேன்.

கார‌ண‌ம் கிண்ணியாவில் காண‌ப்ப‌டும் பிறை அறிவித்த‌ல் கொழும்புக்கு சென்று அது ச‌ரியா என்ப‌தை ஆராய்வ‌த‌ற்கு கால‌தாம‌த‌ம் ஏற்ப‌டுவ‌தால் கொழும்பு பெரிய‌ ப‌ள்ளியில் கூடிய‌ பிறைக்க‌மிட்டியின‌ர் 8 ம‌ணி வ‌ரை இருந்துவிட்டு நாட்டில் எங்கும் பிறை தெண்ப‌ட‌விலை என‌ சொல்லிவிட்டு வீடுக‌ளுக்கு ஓடி விடுகின்ற‌ன‌ர்.

இம்முறையும் நிச்ச‌ய‌ம் இன்று கிண்ணியாவில் பிறை தெரியும். ஆனால் க‌ர்வ‌ம் கொண்ட‌ கொழும்பு த‌லைமைக‌ள் அத‌னை ஏற்குமா என்ப‌து ச‌ந்தேக‌ம்தான்.
Mubarak Abdul Majeeth
இன்று நிச்சயம் கிண்ணியாவில் பிறை தெரியும்... ஆனால் க‌ர்வ‌ம் கொண்ட‌ கொழும்பு த‌லைமைக‌ள் அத‌னை ஏற்குமா என்ப‌து ச‌ந்தேக‌ம்தான். இன்று நிச்சயம் கிண்ணியாவில் பிறை தெரியும்...  ஆனால் க‌ர்வ‌ம் கொண்ட‌ கொழும்பு த‌லைமைக‌ள் அத‌னை ஏற்குமா என்ப‌து ச‌ந்தேக‌ம்தான். Reviewed by Madawala News on April 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.