பொருளாதார சுமையை குறைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்ஹஸ்பர் ஏ.எச்_

அரிசி விலையை குறைக்க கோரி திருகோணமலை நகர சபைக்கு முன்னால் (09)கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. குறித்த போராட்டத்தை வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். பட்டினி சாவு எமக்கு வேண்டாம், இலங்கை அரசாங்கம் அரிசி விலையை குறைக்க வேண்டும் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருளாதார சுமையில் இருந்து மக்களை இந்த அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் பொருட்களுக்கான விலையை குறைக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இதனை புரிந்து மக்களுக்காக செயற்பட்டு விலைகளை குறைக்க முன்வர வேண்டும் வாக்குகளுக்காக மாத்திரம் மக்களிடம் வராமல் மக்கள் பிரச்சினைகளை பார்க்க வேண்டும் எதிர் வரும் தேர்தல் ஜனாதிபதி பாராளுமன்ற தேர்தல் என உள்ளது .டொலர் பெறுமதி அதிகரிக்கும் போது பொருட்களின் விலை அதிகரிக்கிறது டொலரின் பெறுமதி குறையும் போது ஏன் பொருட்களின் விலை குறைவதில்லை அரிசிக்கான நிர்ணய விலையை வகுத்து மக்களை காப்பாற்றுங்கள் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதன் போது திருகோணமலை நகர் பகுதியில் இது தொடர்பான துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டு வாசகங்களும் பல இடங்களில் ஒட்டப்பட்டன.
இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
--
Hasfar A Haleem BSW (Hons)
Journalist


பொருளாதார சுமையை குறைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் பொருளாதார சுமையை குறைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் Reviewed by Madawala News on April 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.