குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற மனைவி, அங்கிருந்து எஜமானரையும் கூட்டி வந்ததால் கோபமடைந்த கணவன், வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பதிவுகுவைத்தில் வீட்டு வேலை செய்து வந்த மனைவி, தான் வேலை செய்த வீட்டின் எஜமானரான 80 வயது முதியவரை அழைத்து வந்த நிலையில்,

அவர் வீட்டில் தங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

மனைவி, குவைத் நாட்டவர் மற்றும் வீட்டில் இருந்த 76 வயது முதியவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படும் நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட உள்ள கணவர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பிபில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் அடங்கிய குழு தீயை அணைத்த போதிலும், வீடு மற்றும் அதன் உள்ளடக்கங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற மனைவி, அங்கிருந்து எஜமானரையும் கூட்டி வந்ததால் கோபமடைந்த கணவன், வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பதிவு குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற மனைவி, அங்கிருந்து எஜமானரையும் கூட்டி வந்ததால் கோபமடைந்த கணவன், வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பதிவு Reviewed by Madawala News on April 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.