பாடசாலை கூட்ட மண்டப நிர்மாண வேலைத் திட்டத்திற்காக 2 மில்லியன் ஒதுக்கீடு செய்த முஷாரப் எம்.பி(ஏயெஸ் மெளலானா)

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலைக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள், கூட்ட மண்டப நிர்மாண வேலைத் திட்டத்திற்காக தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியில் இருந்து முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று அண்மையில் பாடசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்ட
கோரிக்கைக்கு அமைவாக அவர் இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் அவரது இணைப்புச் செயலாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான ஏ.எம். அஷாம் மெளலவி ஆகியோருக்கு இப்பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் சார்பாக
அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நிதி ஒதுக்கீட்டிற்கான வேலைகளை விரைவாக ஆரம்பித்து, நிறைவு செய்வதற்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற சாய்ந்தமருது பிரதேச செயலாளர், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அவர் விசேட நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Aslam S.Moulana
Journalist
பாடசாலை கூட்ட மண்டப நிர்மாண வேலைத் திட்டத்திற்காக 2 மில்லியன் ஒதுக்கீடு செய்த முஷாரப் எம்.பி பாடசாலை கூட்ட மண்டப நிர்மாண வேலைத் திட்டத்திற்காக 2 மில்லியன் ஒதுக்கீடு செய்த முஷாரப் எம்.பி Reviewed by Madawala News on April 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.