குன்றின் கீழ் கவிழ்ந்து வீழ்ந்த வேன் - தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள். #இலங்கைஹரகமவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று ஹங்குந்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூல்கந்துரை  பிரதேசத்தில் வைத்து குன்றின் மீதிருந்து கீழே  கவிழ்ந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த சாரதியிடம் குறிப்பிட்ட  வேன் ஓட்டுவதற்குத் தேவையான கனரக வாகன  சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் , வைத்தியசாலையிலிருந்து  வெளியேறியவுடன் அவர் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


மேலும் படுகாயமடைந்த இரு பெண்களையும் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது 

குன்றின் கீழ் கவிழ்ந்து வீழ்ந்த வேன் - தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள். #இலங்கை குன்றின் கீழ் கவிழ்ந்து வீழ்ந்த வேன் - தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள். #இலங்கை Reviewed by Madawala News on April 08, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.