சுதந்திரக் கட்சி தலைமையகம் முன்பாக அமைதியின்மைஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இன்று கட்சி தலைமையகத்திற்கு சென்றுள்ளனர். 


இதன்போது, தலைமையகத்திற்குள் நுழைய அவர்களை பொலிஸார் அனுமதிக்கவில்லை.


ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து சில ஆவணங்கள் காணாமற்போனமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால்,  தலைமையகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.


மே தினக்கூட்டம் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தொகுதி அமைப்பாளர்களுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.


எனினும், ஆவணங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால், கட்சித் தலைமையகத்தின் பிரதான நுழைவுப் பகுதிக்குள் பிரவேசிக்க பொலிஸாரால் அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், பிரதான நுழைவுப் பகுதி அல்லாமல் வேறொரு நுழைவுப்பகுதி ஊடாகவேனும் தலைமையகத்திற்கு அருகில் உள்ள மற்றைய இரண்டாம் கட்டடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு தாம் கோரிக்கை விடுத்ததாகவும் அதனையும் பொலிஸார் மறுத்ததாகவும் அவர் கூறினார்.


எந்த விடயத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் தாம் கேள்வியெழுப்புவதாகவும் ஆவணங்கள் காணாமல் போனமை தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கும் இரண்டாம் கட்டடத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதிக்காமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.


எனவே, இந்த பிரச்சினை தொடர்பில் தாம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து சில ஆவணங்கள் காணாமல் போனமை தொடர்பில் மருதானை பொலிஸில் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுதந்திரக் கட்சி தலைமையகம் முன்பாக அமைதியின்மை சுதந்திரக் கட்சி தலைமையகம் முன்பாக அமைதியின்மை Reviewed by Madawala News on April 06, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.