இலங்கையில் இன்று ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது - நாளை (புதன்) நோன்பு பெருநாள்ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலை பிறை நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (09) செவ்வாய் மாலை தென்பட்டமையினால் நாளை புதன் (10) நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார விவகார திணைக்களம் ஆகியன இணைந்து அறிவித்தன.


புனித ஷவ்வால் மாத தலை பிறையினை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.இந்த தலை பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
இலங்கையில் இன்று ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது - நாளை (புதன்) நோன்பு பெருநாள் இலங்கையில் இன்று ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது - நாளை (புதன்) நோன்பு பெருநாள்  Reviewed by Madawala News on April 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.